கொடிக்கட்டி பறக்கும் சன் டிவி.. சறுக்கிய விஜய் டிவி.. இந்த வார TRP ரேட்டிங்கில் முதலிடம் பிடித்த டாப் 5 சீரியல் லிஸ்ட்..!

Author: Vignesh
1 December 2023, 1:45 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது

அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

vijay tv serial -updatenews360

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

singapenne

இந்நிலையில், டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் அனைத்து இடங்களையும் சன் டிவியின் சீரியல்கள் பிடித்து வருகிறது. அதாவது கயலை பின்னுக்கு தள்ளி புதிதாக வந்த சிங்கப் பெண்ணே சீரியல் தான் இப்போது முதல் இடத்தில் கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது. தற்போது, 11.20 புள்ளிகள் பெற்று சிங்க பெண்ணே புதிய உச்சத்தை பெற்று இருக்கிறது. கயல் சீரியல் 10.34 வானத்தைப்போல 9.88 புள்ளிகள் பெற்று இருக்கின்றன.

டாப் 5 லிஸ்ட்

சிங்க பெண்ணே 11.20
கயல் 10.34
வானத்தைப்போல 9.88
எதிர்நீச்சல் 9.78
சுந்தரி 9.66

விஜய் டிவி தொடர்கள் பெற்ற ரேட்டிங் இதோ..

சிறகடிக்க ஆசை – 7.49
ஆஹா கல்யாணம் – 7.17
பாக்கியலட்சுமி – 7.06

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!