சன் டிவி VJ நக்ஷத்ராவுக்கு கூடிய சீக்கிரம் டும் ! டும் ! டும் !
22 January 2021, 2:00 pmமுன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வானவில் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியானவர் நட்சத்திரா நாகேஷ். அதன்பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பொது விழாக்கள், சினிமா விழாக்களையும் தொகுத்து வழங்கினார். வாணி ராணி, லட்சுமி ஸ்டோர் தொடர்கள் மூலம் நடிகை ஆனார்.
அதன்பிறகு சேட்டை, வாயை மூடி பேசவும், மிஸ்டர் லோக்கல் படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்தார். நடிகை நக்ஷத்ரா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது “சன் சிங்கர்” என்ற நிகழ்ச்சியின் மூலமாக தான்.
சன் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை நடிகை நக்ஷத்ரா தொகுத்து வழங்கி அசத்தினார். இதனை தொடர்ந்து தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க ஆரம்பித்தார் நடிகை நக்ஷத்ரா. தற்போது வணிகன் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். ஆனந்த் நாக் கதாநாயகனாக நடித்துள்ளார்.
அதே சமயம், தற்போது நடிகை நக்ஷத்ரா நடிகை குஷ்பூ நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் “லக்ஷ்மி ஸ்டோர்ஸ்” என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். நடிகை நக்ஷத்ரா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்குவதில்லை, விருது நிகழ்சசியும், திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.
தற்போது இவர் சமூக வலைத்தளங்களில் தான் திருமணம் செய்ய போகும் நபரை அறிமுகம் செய்துள்ளார், அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
0
0