ஜூனியர் சுந்தரி வந்தாச்சு… சீரியல் நடிகை கேப்ரில்லா போட்ட பதிவு!
Author: Udayachandran RadhaKrishnan6 May 2025, 1:37 pm
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா.
கிராமத்து பெண்ணாக கலக்கிய கேப்ரில்லா, நகரத்தில் தனது கணவருடன் ஏற்பட்ட பிரிவு, தனது கனவு என அடுத்தடுத்து வேகமாக நகர்ந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு.
இதையும் படியுங்க: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?
பார்ட் 1 முடிந்ததும், பார்ட் 2 போட்டு சீரியலை தொடர்ந்து ஒளிபரப்பினர். சீரியல் முடிவுக்கு வந்த போது நடிகை கேப்ரில்லா கர்ப்பமானார். தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வந்தார்.

அண்மையில் வளைகாப்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்தது. தற்போது அவருக்கு மகள் பிறந்துள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவை ஒன்றை போட்டுள்ளார்.
அதில், உனது அழுகை எனது வலிக்கும் நிம்மதிக்கும் மருந்தாக்கியவளே…இவ்வுலகம் உனக்கானது மகளே..என்னுடைய அடி மனது நன்றியை திருச்சி லலிதா நர்சிங் ஹோமுக்கு தெரிவித்து கொள்கிறேன்.

சித்ரா அம்மா, மருத்துவர்கள் செவிலியர்கள் இன்றி சுக பிரசவம் சாத்தியம் இல்லை, எனது அன்பு கொட்டி குடுக்கும் எனது மக்களின் பிராத்தனைக்கும் உயிர் கலந்த நன்றிகள், இந்த தருணத்திற்காக காத்து கொண்டு இருக்கும் என்னுடைய சகோதரிகள் அனைவருக்கும் இந்த தருணம் அமைய வேண்டும் என்பதை எனது முதல் பிராத்தனையாக இறைவனிடமும் விதியிடமும் வேண்டி கொள்கிறேன். இப்படிக்கு Gabrella என பதிவிட்டுள்ளார்.