நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி: வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதி

Author: Udhayakumar Raman
28 October 2021, 9:33 pm
Quick Share

சென்னை: முழு உடல் பரிசோதனைக்காகவே நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அவரது மனைவி லதாரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அவர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவமனை தரப்பில் கூறுகையில், இன்று இரவோ அல்லது நாளை காலையிலோ நடிகர் ரஜினி வீடு திரும்புவார் என தெரிவித்துள்ளது. ரஜினி நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக உள்ளதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். தற்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி பலரும் பிரார்த்தனை செய்கின்றனர்.

Views: - 289

0

0