தவறி கீழே விழுந்து பலத்த அடி வாங்கிய சூப்பர் சிங்கர் புகழ் பாடகி நித்யஸ்ரீ : சோகத்தில் ரசிகர்கள்! (வீடியோ)

30 January 2021, 3:13 pm
Super Singer Nithya Shree - Updatenews360
Quick Share

எவ்ளோவோ விஜய் டிவியில் நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் சோபிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள், அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான நித்யஸ்ரீ. கடந்த வருடம் கேரளாவில் வெள்ளம் வந்து எல்லோரும் உணவுக்கும், உடைக்கும், இருப்பிடத்திற்கு அவதிப்பட்டு கொண்டிருக்கும்போது,
இவர் தனது உறவினர்கள், நண்பர்கள் என பலரிடம் கேரள வெள்ளத்திற்காக பணம் வசூலித்து மொத்தமாக ரூ. 1.5 லட்சத்தை மலையாள கிளப்பின் உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவரின் இந்த குணத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இவர் தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளமெர் போட்டோக்களும், வீடியோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

அப்படி சமீபத்தில் நித்ய ஸ்ரீ ஆல்பம் ஒன்றின் ஷூட்டிங்கில் பங்கேற்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. ஆடி கொண்டிருக்கும்போது நிலைதடுமாறி விழுந்த நித்யஸ்ரீக்கு அடிபட்டது.

இதுகுறித்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நித்யஸ்ரீ, தன்னை நலம் விசாரித்தவர்களுக்கு நன்றியும், மெல்ல நலம் பெற்று வருவதாகவும் விரைவில் பூரண நலமடைவேன் என்றும் கூறியுள்ளார்.

Views: - 0

0

0