அசோக் செல்வனுடன் தன்னை சேர்த்து வைத்து பேசிய ரசிகர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி !

30 September 2020, 1:00 pm
Quick Share

பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் கிளமெர் போட்டோக்களும் கிளாமர் அவ்வப்போது பதிவு செய்வார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன் நடிகர் அசோக் செல்வனை பிரகதி காதலித்து வருவதாக கோலிவுட் திரையுலகில் வதந்தி ஒன்று பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு “இப்போதைக்கு திருமணம் குறித்த எந்தவித நினைப்பும் தனக்கு இல்லை என்றும், தன்னுடைய கேரியர் தான் முக்கியம்” என்றும் பிரகதி கூறினார்.

நேற்று Live Chat-இல் நெட்டிசன் ஒருவர் பிரகதியிடம், “அசோக் செல்வன் எப்படி இருக்கிறார்?” என்ற கேள்விக்கு பதிலளித்த பிரகதி “அவரைத்தான் கேட்கணும்” என்று கூறியுள்ளார். பிரகதியின் அதிரடி பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 21

0

0