கடன் கழுத்தை நெறிக்குது… சொந்த ஊருக்கே போகவேண்டியது தான் – வேதனையில் செந்தில் – ராஜலக்ஷ்மி!

Author: Shree
21 June 2023, 8:02 pm

பிரபல நாட்டுப்புற ஜோடி பாடகர்களான செந்தில் கணேஷ் – ராஜலக்ஷ்மி விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கி தங்களது கானா பாடல்களால் பட்டி தொட்டியெங்கும் பெருமளவில் பிரபலமானார்கள்.

அந்த சீசனில் கானா பாடல்களை மட்டுமே பாடி செந்தில் கணேஷ் நிகழ்ச்சியின் இறுதிவரை சென்று வெற்றியாளர் ஆனார். அதனை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தம்பதியினருக்கு படங்களில் பாடும் வாய்ப்பு குவிந்தது‌. இவர்கள் இருவரும் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் என கச்சேரிகளில் பாடி வருமானம் சம்பாதித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராஜலக்ஷ்மி, சமூகவலைத்தளங்களில் நாங்கள் குறுகிய காலத்திலே ஓஹோன்னு வளர்ந்துவிட்டோம் என்றும் இதுங்களுக்கு வந்த வாழ்வு பார்த்தீங்களா? என்றெல்லாம் பலர் எங்களை விமர்சித்தனர். ஆனால், உண்மையில் சொல்லப்போனால் நங்கள் கார், வீடு எல்லாமே லோன் போட்டு தான் மாத தவணையாக கட்டிக்கொண்டிருக்கிறோம்.

கொரோனா லாக்டவுன் சமயத்தில் எங்களுக்கு எந்த வருமானமும் இல்லை. படவாய்ப்புகள், கச்சேரிகள் எதுவுமே இல்லை. அப்போது கையில் இருந்து காசு வச்சி தான் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் எங்களால் லோன் காட்டவே முடியவில்லை. இதனால் எல்லாத்தையும் விற்று கடனை மொத்தமாக அடைத்துவிட்டு சொந்த ஊருக்கு போய்விடலாம் என முடிவெடுத்துவிட்டோம் என மிகவும் உருக்கமாக பேசியிருந்தார்.

  • Mari Selvaraj Rajinikanth Movie இரண்டு முறை கதை கேட்டும் மாரி செல்வராஜை ஒதுக்கிய பிரபல ஹீரோ..காரணம் இது தானா.!