“பாட்ஷா பாட்ஷா”..! கைதட்டி ரசித்த குழந்தை..! வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சூப்பர் ஸ்டார்..!

12 November 2020, 10:47 am
Batcha_Child_UpdateNews360
Quick Share

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மாஸ் ஹிட் படமான “பாட்ஷா” படத்தை கைதட்டி ரசித்த குழந்தைக்கு, நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதால், குழந்தையின் பெற்றோர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா எனும் திரைப்படத்தில், “சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்” எனும் பாடல் வரிகள் வரும். அதற்கேற்றாற் போல், சின்னக் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ரஜினியின் நடிப்பிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் தற்போதும் இருக்கிறது.

அப்படிப்பட்ட ஒரு ரசிகரான குழந்தை, ரஜினியின் பாட்ஷா படத்தை பார்த்து ரசிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ரஜினிகாந்த் மற்றும் ரகுவரன் நடிக்கும் ஒரு சீன் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், ரஜினி, “நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கை விட மாட்டான், கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான், ஆனால் கை விட்டுடுவான்” என வசனம் பேசும் காட்சியும் பின்னணியில் “பாட்ஷா பாட்ஷா” என ஒலிக்கும் காட்சியும் வருகிறது. இதைப் பார்த்த குழந்தை ஆரவாரத்தோடு சிரித்து மகிழ்கிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் ஹிட் அடித்த நிலையில், சம்பந்தப்பட்ட குழந்தையை கண்டறிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கே உரிய பாணியில், “கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், நன்றி” என வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார்.
தலைவரே நேரடியாக தனது குழந்தைக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதைக் கேட்டு குடும்பத்தினர் திக்குமுக்காடிப் போயுள்ளனர்.

Views: - 34

0

0

1 thought on ““பாட்ஷா பாட்ஷா”..! கைதட்டி ரசித்த குழந்தை..! வாய்ஸ் மெசேஜ் அனுப்பிய சூப்பர் ஸ்டார்..!

Comments are closed.