பட்டய கிளப்பிட்டாங்க ஐஸ்வர்யா…. மதங்களை கடந்து வெளியான “லால் சலாம்” டீசர்!

Author: Shree
12 November 2023, 1:04 pm

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். முஸ்லீம் நபராக இப்படத்தில் நடித்துள்ள ரஜினி மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

இதற்காக ரஜினி மும்பைக்கு புறப்பட்டு சென்று அப்படத்தின் வேளைகளில் ஆர்வம் காட்டி வந்தார். பெரும்பாலான படப்பிடிப்பு மும்பையில் நடத்தப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் இப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டிருந்தது. அதில் கலவரம் வெடிக்க, ரஜினிகாந்த் இஸ்லாமியர் போல தாடி வைத்து, தொப்பி அணிந்து, கண்ணாடி அணிந்து ஸ்டைலாக வர மாதிரி போஸ்டர் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படம் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தியும் அதில் நடக்கும் அரசியலை பற்றியும் உருவாகியுள்ளது. இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய ரோலில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தீபாவளி தினத்தை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள டீசரில், “விளையாட்டில் மதத்தை கலந்திருக்கீங்க… குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சியிருக்கீங்க” என ரஜினிகாந்த் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இதோ அந்த வீடியோ:

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!