சம்பளத்தை குறைத்த சூப்பர் ஸ்டார் : ஆஸ்தான இயக்குநரை வைத்து அடுத்த படத்திற்கு பிளான் போட்ட ரஜினி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2021, 2:39 pm
Rajni Ks Ravikumar- Updatenews360
Quick Share

அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த புதிய படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைவரின் அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வசூலில் ஓரளவு சாதனை என்றாலும், ரஜினி அதிருப்தியாக உள்ளதாகவே கூறப்படுகிறது.

எப்போதும் ஒரு படத்தில் நடிக்கும் போதே அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துவிடும். ஆனால் அண்ணாத்த படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த படம் இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்த நிலையில் ஐந்து இயக்குநர்கள் ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார்கள். எல்லோரிமும் தனித்தனியே கதை கேட்டிருக்கிறார் ரஜினி. ஆனால் வந்த எல்லோருமே ஒன் லைன் மட்டுமே சொல்லி ஒகே என்றால் முழுக்கதையைத் தயார் செய்கிறேன் என்று ஒரே மாதிரி சொல்லியிருக்கிறார்கள்.

இதனால் ரஜினி ஒன்லைன் ஸ்டோரி எல்லாம் வேண்டாம், முழுக்கதையும் சொல்லும் இயக்குநர்களை வரச் சொல்லி கட்டளையிட்டுள்ளார். மேலும் தனது சம்பளத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளாராம். இதனால் பல இயக்குநர்கள் இந்த முறை ரஜினியை வைத்து இயக்க காத்துள்ளனர்.

இந்த நிலையில் ஒன்லைன் ஸ்டோரி வேளைக்கு ஆகாது என கருதிய தலைவர், தனது இன்ஸ்டியூட் நண்பரான அந்த இயக்குநருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். நான் ஒரு வருடத்திற்கு 28 படங்கள் செய்திருக்கிறேன். அவ்வளவு கதைகள் கிடைத்தன. ஆனால் இன்று அப்படிப்பட்ட கதைகள் கிடைக்கவில்லையே என்று கூறியிருக்கிறார்.

மேலும் என்னோட அடுத்த படத்திற்கு நீங்கள் தான் இயக்குநர் என்றும், படம் நிச்சம்ய வெற்றியை தொட்டாக வேண்டும் அதோடு படத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

Superstar Rajinikanth To Team Up With KS Ravikumar Again?

அந்த இயக்குநர் வேறு யாரும் இல்லை.. ரஜினியை வைத்து டாப் ஹிட் படங்களை கொடுத்த ஆஸ்தான இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்தான். பல மாதங்களாகவே ரவிக்குமாரிடம் தனது ஒரு கதை தயார் செய்யும்படி ரஜினி பேசி வந்திருக்கிறார். அதனால் அடுத்தப்படம் தன் ஆஸ்தான இயக்குநர் ரவிக்குமார் என்று ரஜினி தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் 2014ல் வெளியான லிங்கா படம் போல ஆகாமல் பார்த்துக்கொள்ளும் படி அன்பு கட்டளையும் விதித்துள்ளாராம்.

Views: - 460

2

0