தீபாவளி ரேஸில் மாஸ் காட்டிய சூப்பர் ஸ்டார்.. கமல், விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த ரஜினி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2022, 1:54 pm

தமிழ் சினிமா என்றாலே உச்ச நடிகர்க வலம் வருபவர் நடிகர் ரஜினி. சூப்பர்ஸ்டாரு யாருனு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்.. இந்த பாடலுக்கேற்றார் போல தமிழக மக்கள் மனதில் உள்ளவர் ரஜினி.

ரஜினியின் நடிப்பில் இறுதியாக வந்த படம், கடந்த ஆண்டு வெளியான அண்ணாத்த. இந்த படத்துக்கு பின் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினி படம் திரைக்கு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டதால் ஜெய்லர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பார்ப்பு உள்ளது.

இந்த நிலையில் கடந்த தீபாவளியன்று, சின்னத்திரைகளில் ஏராளமான புதிய படங்கள் ஒளிபரப்பாகின. குறிப்பாக சன் டிவியில் பீஸ்ட், விஜய் டிவியில் விக்ரம் என களைகட்டியது.

மக்கள் எந்த படத்தை பார்ப்பது என குழம்பிக் கொள்ளும் வகையில் மற்ற சேனல்களிலும் புது புதுப் படங்கள் ஒளிபரப்பானது. ஆனால் டிஆர்பி ரேட்டில் எந்த படம் முதலிடம் பிடித்தது தெரியுமா? விஜய், கமல் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக, சன்டிவியில் தீபாவளியன்று மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பான ரஜினியின் அருணாச்சலம் திரைப்படம்தான் இடம்பிடித்துள்ளது.

இதன்மூலம் மக்கள் ரஜினி படங்களை அதிகமாக ரசிப்பது தெரியவந்துள்ளது. 1997ல் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் மனதில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரபல ஆன்லைன் சேனலில் சுந்தர். சி யிடம் கேள்ளி கேட்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?