நிர்வாண நிலையில் பிணமாக கண்டெடுக்ப்பட்ட பிரபல நடிகை – 4 வருடங்களுக்கு பிறகு காரணத்தை கூறிய தோழி !

15 February 2020, 9:43 am
Sabarna 1- updatenews360
Quick Share

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக நல்ல பெயரை சம்பாதித்த சபர்ணா, பின்னர் டி.வி. தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்பின் தனது துறுதுறு பேச்சினால் சில சினிமா பட வாய்ப்புகள் கிடைத்தன.

இந்நிலையில் 2016 – ஆம் ஆண்டு அவரது உடல் அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அப்போது கூறப்பட்டது.

சபர்ணா படிக்காதவன், காளை, பூஜை போன்ற படங்களில் கதாநாயகிக்கு தோழியாக நடித்துள்ளார்.

இவரது தற்கொலைக்கு பின், அவரது உடல், ஆடை ஏதும் இன்றி அழுகிய நிலையில் ரத்த வெள்ளத்தில் இருந்தபடி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியினை அந்த காலத்தில் ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவரது தோழியும் சீரியல் நடிகையுமான உஷா எலிசபெத், சபர்ணா தற்கொலை குறித்து பேசியிருக்கிறார்.

அதில் அவர், “பல நாட்களாக பட வாய்ப்புகள் இல்லாததால் சபர்ணா மன உளைச்சலில் இருந்ததாகவும் அதனால் தான் அவர் தற்கொலை முடிவு எடுத்திருக்கிறார்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது நம்பும் படியாக இல்லை என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.