படம் ஃபிளாப் ஆனதால் தலைமறைவாக சூர்யா படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்? அடப்பாவமே!
Author: Prasad20 May 2025, 5:05 pm
சூர்யா 46
சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் தற்போது சூர்யா தனது 46 ஆவது திரைப்படத்தின் பணிகளையும் தொடங்கியுள்ளார்.

“சூர்யா 46” திரைப்படத்தை “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கவுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இத்திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மன்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு ஆச்சரிய செய்தி வெளிவந்துள்ளது.
தலைமறைவு தயாரிப்பாளர்
அதாவது உண்மையில் “சூர்யா 46” திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜாதான் தயாரிக்கிறாராம். அதாவது இதற்கு முன் அவர் சூர்யாவை வைத்து தயாரித்த “கங்குவா” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.

ஆதலால் “சூர்யா 46” திரைப்படத்தில் அவரது பெயரை தயாரிப்பாளராக போட்டால் இத்திரைப்படத்தை விநியோகஸ்தர்கள் விலைக்கு வாங்குவதில் சிக்கல் ஏற்படும் என்று யோசித்தார்களாம். இந்த நிலையில்தான் சித்தாரா என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் பெயரில் இதனை உருவாக்குகிறார்களாம்.
இத்திரைப்படத்தால் வரும் லாபத்தை 80 சதவிகிதம் ஞானவேல்ராஜாவிற்கும் 20 சதவிகிதம் சித்தாரா நிறுனத்திற்கும் பிரித்தளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.