சூர்யாவை டார்கெட் செய்யும் பிரபல மலையாள இயக்குனர்…வெளிவந்த அதிரடி அப்டேட்..!

Author: Selvan
28 January 2025, 3:48 pm

சூர்யா 47 பட அப்டேட்

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ரெட்ரோ படத்திலும்,ஆர் ஜே பாலாஜி இயக்கும் சூர்யா45 படத்திலும் நடித்து வருகிறார்.இந்த இரண்டு படங்களும் சூர்யாவுக்கு ஒரு COMEBACK கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்க: குடும்பங்கள் கொண்டாடும் குடும்பஸ்தன்…நாளுக்கு நாள் கல்லா கட்டும் படத்தின் வசூல்..!

மேலும் வெற்றிமாறனின் அடுத்த படமான வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க உள்ளார்.இதற்கான படப்பிடிப்புகள் இந்த ஆண்டில் விரைவில் தொடங்க உள்ளதாக பட தயாரிப்பாளரான கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே தெரிவித்திருந்தார்.இப்படி அடுத்தடுத்த படங்களில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில்,தற்போது சூர்யாவின் 47வது பட குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

Suriya's collaboration with Basil Joseph

இப்படத்தை மலையாள இயக்குனர் மற்றும் நடிகருமான பாசில் ஜோசப் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.இவர் ஏற்கனவே மலையாளத்தில் டொவினோ தாமஸை வைத்து மின்னல் முரளி படத்தை இயக்கி ரசிகர்களை கவர்ந்தவர்,அதுமட்டுமில்லாமல் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்.

இந்த சூழலில் தற்போது சூர்யா 47 படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர உள்ளார்.மேலும் இப்படம் குறித்த அடுத்தடுத்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?