இரவு கண் விழித்து காத்திருந்த சூர்யா ரசிகர்களை “ஏப்ரல் Fool” செய்த கலைப்புலி எஸ் தாணு? அடக்கொடுமையே…
Author: Prasad23 July 2025, 3:40 pm
சூர்யாவின் 50 ஆவது பிறந்தநாள்
இன்று சூர்யா தனது 50 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை சூர்யா தனது மனைவி ஜோதிகாவுடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது. மேலும் தனது ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபி வீடியோவையும் சூர்யா பகிர்ந்திருந்தார். சூர்யாவிற்கு பலரும் தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு இரவு 12 மணிக்கு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிடுவதாக நேற்று இரவு அறிவித்திருந்தார். வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட்டாக இருக்குமோ என சூர்யா ரசிகர்கள் பலரும் ஆவலோடு காத்துக்கொண்டிருந்தனர்.
இதுதான் உங்க சிறப்பு வீடியோவா?
ஆனால் இரவு 12 மணிக்கு “காக்க காக்க” திரைப்படத்தில் இடம்பெற்ற உயிரின் உயிரே பாடலின் லிரிக்கல் வீடியோவை பதிவேற்றி சூர்யாவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்தார் எஸ் தாணு. இது சூர்யா ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இதற்குத்தானா இவ்வளவு பில்டப்? என சூர்யா ரசிகர்கள் பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். இரவு கண் விழித்த காத்துக்கிடந்த ரசிகர்களுக்கு இது பெருத்த ஏமாற்றம் கொடுத்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.
🚓🚨 Special Video Loading….12am….2 Hours to go
— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2025
பொன்விழா ஆண்டில், புதிய சரிதம் படைத்திட,
— Kalaippuli S Thanu (@theVcreations) July 22, 2025
பிறந்த நாள் வாழ்த்துகள் @Suriya_offl #HappyBirthdaySuriyahttps://t.co/P1HQ0m8elC
