விக்ரம் படத்தில் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் இவர்தான் நடித்திருக்க வேண்டியது.. நடிச்சிருந்தா நல்லாதான் இருந்திருக்கும்..!

Author: Vignesh
19 January 2023, 4:00 pm

கைதி, மாஸ்டர் போன்ற திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இப்படம் பெரும் வெற்றி வசூலில் ஈடுபட்டு 450 கோடிக்கும் மேல் உலகம் முழுவதும் வசூல் பெற்றது. விக்ரம் படம் முழுவதும் லோகேஷின் பேன் பாய் சம்பவமாக அமைந்தது குறித்து அனைவர்க்கும் தெரியும். இப்படத்தில் கைதி, பழைய விக்ரம் போன்ற பல reference பயன்படுத்தி லோகேஷ் ஒரு தனி யூனிவெர்ஸ் படைத்திருந்தார்.

vikram - updatenews360

இந்நிலையில், சூர்யா ஏற்று நடித்த ரோலெக்ஸ் கதாபாத்திரம் இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று என சொல்லப்பட்டது.

surya - updatenews360

அப்படிப்பட்ட ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் முதன் முதலில் தேர்வானவர் சூர்யா இல்லையாம். சீயான் விக்ரம் தான் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டு இருந்த நிலையில், கதாபாத்திரத்தின் நீளம் குறைவாக இருக்கிறது என்று விக்ரம் கூறி மறுத்துவிட்டாராம். அதன்பின் தான் சூர்யாவை லோகேஷ் கனகராஜ் அணுகியுள்ளார்.

surya - updatenews360
  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!