அஜித்தின் நேர்கொண்ட பார்வை பட பாணியில் உருவாகும் சூர்யாவின் புதிய படம் !

Author: Udayaraman
23 July 2021, 6:42 pm
Quick Share

சூர்யாவின் பிறந்தநாளான இன்று அவரின் 39 வது படத்தின் போஸ்டரை வெளியிட்டு உள்ளது படக்குழு. ஜெய்பீம் என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை சூர்யாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

சூரரை போற்று படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார் சமீபத்தில்தான் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. அதன்பின் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதைத் தொடர்ந்து தற்போது சூர்யாவின் 39வது படமான ஜெய்பீம் படத்தின் போஸ்டரை அவரது பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளது படக்குழு.

பழங்குடியின மக்களின் வாழ்க்கையைப் பற்றி உருவாகும் இந்த படத்தை தா. செ. ஞானவேல் இயக்குகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரமான வக்கீல் கதாபாத்திரத்தில் சூர்யாவை நடித்துள்ளார். இதில் சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ் ரஜிஷ விஜயன், லிஜோ மோல் ஜோஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக எஸ் ஆர் கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைப்பயிற்சி அன்பரிவ் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. சூர்யா முதன் முதலாக வக்கீலாக நடிக்க உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி உள்ளது.

Views: - 285

9

1