கங்குவா படத்திற்காக இப்படியொரு லுக்கா..? ட்ரெண்டாகும் சூர்யாவின் லேட்டஸ்ட் பிக்..!

Author: Rajesh
20 August 2023, 10:52 am

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.

kanguva -updatenews360

வரலாறு சம்மந்தப்பட்ட திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படமானது 2024ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அவ்வப்போது இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில், சூர்யாவின் சிக்ஸ் பேக் லுக் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!