கங்குவா வசூலை கூட தாண்டாத ரெட்ரோ… சூர்யாவுக்கு வந்த சோதனை!
Author: Udayachandran RadhaKrishnan2 May 2025, 10:45 am
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு ரெட்ரோ வெளியாகியுள்ளதால் சூர்யா ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்போடு காத்திருந்தனர்.
நேற்று படம் வெளியான நிலையில் வந்த முதல் விமர்சனத்தில், படத்தின் முதல் பாகம் அருமையான கதையோட்டத்தில் சென்றதாகவும், இரண்டாம் பாதி சுவாரஸ்யமே இல்லாமல் சொதப்பியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கார்த்திக் சுப்புராஜ் மேஜிக் படத்தில் மிஸ் ஆனதாகவும், சூர்யாவுக்கு நிச்சயம் ஒரு கம்பேக் படமாக இருக்கும், ஆனால் இரண்டாம் பாதி சொதப்பலால் படம் மந்தமாக செல்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் கங்குவா படம் தோல்விக்கு பிறகு சூர்யாவுக்கு இந்த படம் நிச்சயம் கைக்கொடுக்கும் என கூறப்பட்ட நிலையில் வசூலில் கூட ரெட்ரோ, கங்குவாவை மிஞ்சவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெட்ரோ படம் உலகம் முழுவதும் ரூ.20 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் ரூ.13 கோடி வசூல் செய்துள்ளதாகவும், கங்குவாவை கம்பேர் செய்யும் போது மிகவும் குறைவு.

கங்குவா படம் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் ரூ.45 கோடி செய்தது. ரெட்ரோ திரைப்படம் பாதிக்கு கூட வசூலாகவில்லை என விநியோகிஸ்தர்கள் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது
