surprise’க்கு மேல் surprise… முதல் திருமண நாளில் கண்ணீர் விட்ட நயன்தாரா!

Author: Shree
10 June 2023, 11:46 am

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது. இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.

நேற்று இவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினார்கள். இது குறித்து விக்னேஷ் சிவன், என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே, இந்த 1 வருடம் ஏற்ற தாழ்வுகள்,எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் என நிறைய தருணங்கள் நினைந்திருந்தது. ஆனால் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வரும்போது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது. அத்துடன் அன்பு, பாசம் ஆகியவற்றை கொடுத்து ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாக என்னை மாற்றி மீண்டும் கனவுகள், இலட்சியத்தை நோக்கி தேடுவதற்கு அனைத்து ஆற்றலையும் கொடுத்ததற்கு மனைவி நயன்தாராவுக்கு நன்றி கூறியிருந்தார்.

அதன் பின்னர் தனது இரட்டை மகன்களை படம்பிடித்து ” Wedding Anniversary அப்பா அம்மா” என decorate செய்து மகன்கள் வாழ்த்தியது போல் கேப்ஷன் கொடுத்திருந்தார். அதன் பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் பேவரைட் பாடலை தனது சிறுவயது நண்பர் புல்லாங்குழல் வாசிக்க அதை மெய்மறந்து கேட்ட நயன்தாரா கண்லங்கி விக்கியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்றி கூறினார். நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து நயன்தாராவுக்கு பிடித்த விஷயங்களை பார்த்து பார்த்து செய்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் விக்கி. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://www.instagram.com/p/CtRUNBdsjBR/?hl=en

  • the reason behind lal salaam movie flop was rajinikanth sir extended cameo said by vishnu vishal ரஜினிகாந்த் ரசிகர்களை சீண்டிப்பார்த்த விஷ்ணு விஷால்! களேபரமான சமூக வலைத்தளம்?