பெண்கள் என்று கூட பார்க்காமல் ஆளை வைத்து அடித்த சூர்யா தேவி ! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட வீடியோ !

Author: Poorni
12 October 2020, 9:51 am
Quick Share

ஐந்து மாதங்களுக்கு முன்பு, வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது குறித்து பல பிரபலங்கள் இவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள். அதில், ரவீந்திரன், சூர்யா தேவி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முக்கியமானவர்கள்.

அதிலும் சூர்யா தேவி வனிதாவை பற்றி மிகவும் கேவலமாக திட்டி, மோசமாக யூடியூப் சேனலில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் வனிதா அவரை பழிவாங்க காத்துகொண்டிருந்த சமயத்தில், கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் சரக்கு அடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் வனிதா.
அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு பிறகாக நாஞ்சில் விஜயன் வனிதாவிற்கு போன் செய்து மன்னிப்பு கேட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டன.

அதன் பிறகு, சூர்யா தேவி தற்போது நாஞ்சில் விஜயன் பற்றி ஒரு வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவியது. இந்த வீடியோவில் சூர்யா தேவி கூறியது என்னவென்றால் ஒரு பெண்ணின் மூலமாக தான் எனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும். மேலும் நீ தாண்டா உன் வீட்டு பங்ஷனுக்கு என்னை கூப்பிட்ட. அதுமட்டுமில்லாமல் நீயும் நானும் ஹாஸ்பிடல் போய் செக் பண்ணா நாம ஒண்ணா இருந்தமா இல்லையான்னு தெரிஞ்சிடும், நீ நல்லா ஆம்பளையா?” என சூர்யா தேவி கூறியுள்ளார்.

ஆனால் தற்போது அந்தப் பிரச்சனை எல்லைமீறி போக நாஞ்சில் விஜயனின் வீடுபுகுந்து நாஞ்சில் விஜயனை அடியாட்களை வைத்து அடித்துள்ளார் சூடிய தேவி. அவர் வீட்டில் இருக்கும் பொம்பளைகளை ஈவிரக்கமின்றி அடித்துள்ளார்கள். அது குறித்து நாஞ்சில் விஜயன் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தன்னை சூர்யா தேவி அவர்கள் ஆள் வைத்து அடித்ததாகவும், இதனால், போலீசில் நான் புகார் செய்துள்ளேன் என்பதையும், நாளை சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

Views: - 59

0

0