ஒரே வருடத்தில் 60 கிலோ Weight Loss? சூர்யா சேதுபதியின் மிரளவைக்கும் உடற்பயிற்சி அனுபவங்கள்!

Author: Prasad
4 July 2025, 2:01 pm

வெளியானது பீனிக்ஸ்

விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள “பீனிக்ஸ்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கியுள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ரணகளமான ஆக்சன் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்களின் மத்தியில் இத்திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்து வருகிறது. எனினும் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகள் மிரளவைப்பதாக பாராட்டி வருகின்றனர்.

surya sethupathi shared his weight loss experience for phoenix movie

சூர்யா சேதுபதி விஜய் சேதுபதி நடித்த பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அந்த சமயத்தில் எல்லாம் அவர் உடல் எடை அதிகமாக காணபட்டார். ஆனால் தற்போது தனது உடல் எடையை குறைத்து  மெருகேத்தியும் உள்ளார். இந்த உருமாற்றம் குறித்த அனுபவங்களை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் சூர்யா சேதுபதி. 

காலையில் 5 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணி வரை…

“இரான் நாட்டில் இருந்து ஒரு MMA சண்டை வீரரை எனக்கு பயிற்சியளிக்க நியமித்திருந்தார்கள். அவர் நம்மை தூக்கி எறிவார். அதன் மூலமாக வரும் வலியை பழகிக்கொள் என கூறுவார். சண்டைக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேடையில் ஏற்றி பயிற்சி கொடுத்தார். அந்த சமயத்தில் நான் 120 கிலோ எடை இருந்தேன். அதனை 62 கிலோவாக குறைத்தவர் அவர்தான். அதுவும் ஒரே வருடத்தில். 

அதிகாலையில் எழுந்து ஓடச்சொல்வார். ஓடி முடித்துவிட்டு அவருக்கு நான் ஓடிமுடித்துவிட்டேன் என்பதை கூறும் விதமாக புகைப்படம் அனுப்ப வேண்டும். அதன் பின் உடற்பயிற்சி செய்வேன். அதனை தொடர்ந்து 3 அல்லது 4 மணி நேரம் பயிற்சி இருக்கும். முதல் ஒரு மணிநேரம் எப்படி ஒழுக்கத்தை கடை பிடிக்க வேண்டும் என பேசுவார். 

surya sethupathi shared his weight loss experience for phoenix movie

இரவு 10 மணிக்கெல்லாம் தூங்க சொல்லிவிடுவார். காலையில் 5.30 மணிக்கு எழுந்துவிடவேண்டும். எழுந்து ஓடிமுடித்துவிட்டு Diet எடுத்துவிட்டு அதன் பின் ஜிம்முக்கு போகவேண்டும். அதன் பின் மதிய உணவு அருந்திவிட்டு அந்த பயிற்சியாளரிடம் செல்ல வேண்டும். 4 மணி போல் அங்கே இருக்க வேண்டும். அதன் பின் 9 மணி வரை பயிற்சி கொடுப்பார். அதனை தொடர்ந்து வீட்டிற்கு வந்துவிடுவேன். இதுதான் கடந்த ஒரு வருடமாக என்னுடைய வழக்கமாக இருந்தது” என அப்பேட்டியில் சூர்யா சேதுபதி பகிர்ந்துகொண்டுள்ளார்.  

  • ssmb29 movie digital rights bagged by netflix அறிவிப்பு வெளிவருவதற்கு முன்பே ஓடிடியில் விற்பனையான ராஜமௌலி திரைப்படம்? என்னப்பா சொல்றீங்க!
  • Leave a Reply