“சித்ராவின் கன்னித்தன்மை மீது சந்தேகப்பட்டு டெஸ்ட் எடுக்க சொன்னான்” – ஹேம்னாத் நண்பர் !

22 January 2021, 11:20 am
Quick Share

கொஞ்ச நாள் அடங்கி இருந்த சித்ராவின் தற்கொலை/கொலை வழக்கு பற்றிய பேச்சுக்கள் மீண்டும் ஹேம்நாத்தின் நண்பர் ரோஹித் கூறிய தகவல்களால் மீண்டும் துவங்கியுள்ளது. ஹேம்நாத்தின் நண்பர் சமீபத்தில் பிரபல யூ ட்யூப் சேனலில் பேட்டி அளித்துள்ளார்.

அதில், “ஹேம்நாத் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்தான். சித்துவை ஹேம்நாத் தினமும் சந்தேகப்பட்டு கொண்டே இருப்பான். சித்துவை எப்போதும் ஒருவருடன் கற்பனை செய்து சந்தேகப்படுவது, சித்து போனில் யாரிடம் பேசுகிறார் என ஃபோனை வாங்கி சோதனை செய்வது, வழக்கத்திற்கு மாறாக சித்ராவை கையாளுவது என பல விஷயங்களை செய்துள்ளான். குறிப்பாக ஹேம்நாத் சித்ராவிடம் அன்பாகவே எதையும் கேட்க மாட்டார். காரை உடைப்பது, அடிப்பது, என இருந்த முரட்டுத்தனமாக நடந்து கொள்வார். குடித்துக் கொண்டே இருப்பார். அவன் ஒரு சைகோ.

ஒரு நாள் சித்ராவின் கன்னித்தன்மை மீது சந்தேகப்பட்ட ஹேம்நாத், என் மனைவியான டாக்டர் அனுவிடமும், இன்னொரு மருத்துவரிடமும் சித்ராவுக்கு விர்ஜினிட்டி சோதனை செய்யச் சொல்லி கேட்டார். இதைப் பற்றி அழுதுகொண்டே சித்து என்னிடம் சொன்னார். இப்படி கேட்கு ஒருவன் எந்த அளவுக்கு சித்ராவை கொடுமை பண்ணியிருப்பான்” என ஹேம்நாத் நண்பர் ரோஹித் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 0

0

0