டாப்ஸிக்கு விரைவில் டும்..டும்..டும்.. 9 வருட டேட்டிங் குறித்து முதன் முறையாக அவரே சொன்ன விளக்கம்..!

Author: Vignesh
24 February 2023, 11:45 am

தமிழில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய இயக்கி தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்சி. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

இந்திக்கு போன பிறகு தன் உடம்பை மிகவும் ஸ்லிம்மாக மாற்றிக்கொண்டார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்புடன் இவர் நடித்த பிங்க் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதற்கடுத்து இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடித்து வருகிறார். தமிழில் இவர் இறுதியாக காஞ்சனா என்ற படத்தில் நடித்து இருந்தார்.

இதனிடையே தான் நடிக்கும் படத்தின் புகைப்படங்கள் மற்றும் அவரின் புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது 35 வயதான டாப்சி டென்மார்க் நாட்டை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மத்தியாஸ் போயும் 9 ஆண்டுகளுக்கு மேலாக டேட்டிங் செய்து வருகிறார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற டாப்சியிடம் உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதில் அளிக்கையில் “நானும், மத்தியாஸ் போயும் 9 வருடங்களாக காதலித்து வருகிறோம் என்றும், தனது சம காலத்து நடிகைகள் பலருக்கு திருமணம் முடிந்துள்ளது எனவும், ஆனால் தான் திருமணத்துக்கு அவசரப்படவில்லை. ஒரு இரண்டு 3 வருடம் போகட்டும், நாங்கள் இவ்வளவு காலம் காதலித்து வருவது பெரிய விஷயம் என்றும், இருப்பினும் தன்னால் அவருடன் நேரத்தைச் செலவிட முடிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

taapsee-pannu - updatenews360 r
  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!