முதல தள்ளி போ.. கெஞ்சிய ரசிகர், கண்டுகொள்ளாமல் சென்ற தனுஷ் பட நடிகை..! (வீடியோ)
Author: Vignesh15 ஜூன் 2024, 3:16 மணி
தமிழில் ஆடுகளம் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அந்த படத்தில் இவருக்கும் தனுஷுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பக்காவாக ஒர்க் அவுட் ஆனது. அதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
சமீப நாட்களாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அழுத்தமான ரோலில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் டாப்ஸி பார்ப்பதற்கு இன்னும் அதே இளமையோடு தான் இருக்கிறார். இந்நிலையில் டாப்ஸி டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரர் மதியாஸ் போவ் என்பவரை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறாராம்.
ரகசியமாக காதலித்து வந்த இந்த ஜோடிக்கு அவர்களின் இருவீட்டிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார்களாம். இதையடுத்து டாப்ஸி மதியாஸ் போவை திருமணம் செய்து உள்ளார்.
மேலும் படிக்க: 2 கல்யாணம்.. 2 விவாகரத்து.. பிரபல நடிகையின் ரகசியத்தை புட்டு புட்டு வைத்த பயில்வான்..!
சமீபத்தில், ஜெயப்பூரில் ரகசியமாக நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலான நிலையில், டாப்ஸி தனது திருமண போட்டோவை கூட வெளியிட விரும்பவில்லை என்றும், முதல் முறையாக ரகசிய திருமணம் பற்றி பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க: பிரபல நடிகையுடன் வருட கணக்கில் ரகசிய உறவு?.. KS ரவிக்குமார் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..!
ரகசியமாக செய்ய வேண்டும் என வேண்டுமென்றே செய்யவில்லை எனவும், எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோருக்கும் தெரியும். என்னுடைய பர்சனல் வாழ்க்கையில் மற்றவர்களை involve செய்ய விரும்பவில்லை. பொதுவாக பிரபலம் திருமணம் செய்தால் எப்படி எல்லாம் பல விதமாக பேசுவார்கள் அதற்கு நான் மனதளவில் தயாராகவில்லை. ஆனால், நான் ஏற்றுக்கொள்வேன், ஆனால் என்னுடைய கணவர் அதை ஏன் சந்திக்க வேண்டும். அதன் பிரைவேட் நிகழ்ச்சியாக நடத்தினோம் என்று டாப்ஸி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் டாப்ஸி ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நிலையில் காரில் ஏறுவதற்காக வந்தார். அப்போது, ரசிகர் ஒருவர் ஓடோடி சென்று டாப்ஸிடம் ஒரே ஒரு செல்பி மேடம் என்று கேட்டு உள்ளார். அதற்கு அவர் முடியாது என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றார். தற்போது, அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
0
0