ஹீரோவை தலையில தூக்கி வச்சி ஆடுறாங்க… சகிக்க முடியல – ரஜினியை மறைமுகமாக விளாசுகிறாரா தமன்னா?

Author: Shree
29 September 2023, 6:40 pm

2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது.

இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள் மூலம் தனது நேர்த்தியான நடிப்பு, பால் நிற தேகம் என ரசிகர்களை சுத்தலில்விட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமாக உள்ளார்.

tamannah

கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றை தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஒரு விஷயத்தில் ரொம்ப மோசம், ஆம், அவர்கள் கமர்ஷியல் விஷயத்துக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஹீரோவை சகிக்க முடியாத அளவிற்கு தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். என்னுடைய ரோல் சில படங்களில் கதைக்கு ஒன்றி போகாமல் எதுக்கு நடிக்க வச்சாங்கண்ணே தெரியாதது போல் இருக்கும். அது போன்ற படங்களில் நடிப்பதற்கு நடிக்காமலே இருக்கலாம் என தமன்னா கூறியுள்ளார். இவர் யாரை சொல்கிறார்? ஜெயிலர் படத்தில் நடித்ததால் ரஜினியை தான் அப்படி சொல்கிறாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!