ஒரே ஒரு பாட்டு தான்.. 3 மடங்கு சம்பளத்தை உயர்த்திய தமன்னா..!

Author: Vignesh
21 August 2024, 9:30 am

பாலிவுட்டில் ஸ்ட்ரீ 2 ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்தது. ராஜ்குமார் ராவ், ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தில் ஐந்து நாட்கள் மட்டும் இந்தியாவில் 228 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

முன்னதாக, இந்த படத்தில் “ஆஜ் கி ராத்” என்ற பாடலுக்கு அதிக கவர்ச்சியாக நடிகை தமன்னா நடனமாடி இருந்தார். அது மட்டும் இன்றி ஒரு சின்ன கேமியோ ரோலில் தோன்றியிருந்தார். அதற்காக, அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தரப்பட்டிருந்தது.

tamanna

ஒரு பாடலுக்கு, இவ்வளவு சம்பளமா என பலரும் அதிர்ச்சி அடைந்து ஆச்சரியத்துடன் கேட்டு வந்தனர். ஒரு பாடலுக்கு, கவர்ச்சியாக ஆடுவதில் பெயர்பெற்ற மற்றொரு நடிகையான நோரா படேஹி வாங்கும் சம்பளத்தை விட தமன்னா மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கி உள்ளாராம். அதாவது, தமன்னா ஆடினால் வட இந்தியா தொடங்கி தென் இந்தியாவில் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆவது குறிப்பிடத்தக்கது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!