டுவிட்டர் மாமாக்களே… மனிதனின் அவசியத்தேவை செக்ஸ்… வாய் கூசாமல் பதிலடி கொடுத்த தமன்னா!

Author: Shree
29 June 2023, 2:37 pm

இந்திய சினிமாவின் பிரபல நடிகையான தமன்னா பாலிவுட்டில் ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 உள்ளிட்ட பாலியல் உறவு குறித்த திரைப்படங்களில் நடித்து மோசமான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். லஸ்ட் ஸ்டோரீஸ் 2 நெட்பிலிக்சில் இன்று வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் தமன்னாவை மோசமாக விமர்சித்து வருவதோடு, 2016 ஆண்டு பேட்டி ஒன்றில் நான் எந்த ஒரு சூழ்நிலையிலும் முத்தக் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று என்று சொன்ன தமன்னா இப்படி பாலியல் உறவு கொண்ட படத்தில் நடித்திருப்பது அவமதிக்கத்தக்கது என ட்விட்டரில் பலர் கடுமையாக திட்டி தீர்த்துள்ளனர்.

தற்போது இதற்கு பதிலளித்துள்ள நடிகை தமன்னா , 2023ல் பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறீர்கள்? என்னைப் பற்றி கேலி, விமர்சனம் செய்யும் ட்விட்டர் மாமாக்களே…. படங்களில் ஹீரோக்கள் கதாநாயகியிடம் வீண் பேச்சு பேசுவதையும், ரொமான்ஸ் செய்வதையும் பார்த்து கைதட்டி சிரித்து அவர்களை சூப்பர் ஸ்டார் ஆகி விடுகிறார்கள். ஆனால். ஒரு பொண்ணு அப்படி நடித்தால் அவளுடைய கேரக்டரை மதிப்பிடுகிறீர்கள். இது ஏன் என்று எனக்கு புரியவில்லை?

நான் என்னுடைய 18 வருட திரைத்துறையில் முத்தமிட்டதில்லை. ஆனால், ஒரு நடிகையாக ஏன் விதிகளை போட வேண்டும் என்று யோசித்தேன். நான் ஏன் நடிகையாக மேலும் வளரக்கூடாது என்று என்னை நானே கேட்டபோது தான் முத்த காட்சி பற்றிய விதி எனக்கு அர்த்தமற்றது என்று புரிந்தது. அதனால்தான் நான் அந்த விதியை மீறினேன். அது மட்டும் இல்லாமல் என்னுடைய காதலர் விஜய் வர்மா இந்த சமூகத்தை நன்கு அறிந்தவர்.

vijay varma tamanna-updatenews360

ஒரு காதலனாக இந்த சர்ச்சைகளை எல்லாம் அவர் ஒரு விஷயமாகவே பார்ப்பதில்லை. அது அவரிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. செக்ஸ் பத்தி பேசுவதை கூச்சமாக நினைப்பவர்களை முட்டாள்தனமாக நினைக்கிறேன். அதை ஒதுக்கி வைக்க வேண்டும். ஒரு மனிதனுடைய அனைத்து தேவைகளைப் போலவே அதுவும் ஒன்று தான் என்று செம கூலாக தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்து விளக்கத்தையும் கூறியுள்ளார் தமன்னா.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!