தலைக்கு ஏறிட்டாவே இப்படித்தான்… ஜெயிலர் சக்ஸஸ் மீட்டில் பங்கேற்காத ரம்யா கிருஷ்ணன், தமன்னா!

Author: Shree
19 August 2023, 5:54 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

உலகம் முழுவதும் வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படம் ஹிட் படம் என விநியோகிஸ்தர்கள் அறிவித்துவிட்டனர் .

இந்நிலையில் ஜெயிலர் படத்தின் சக்ஸஸ் மீட் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குனர் நெல்சனை தவிர பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எந்த பிரபலமும் பங்கேற்கவில்லை. ரஜினி இமயமைக்கு சென்றதால் அவர் வரவில்லை. அனிருத் மற்ற படத்தில் பிசியாக இருப்பதால் வரவில்லை. மேலும் தமன்னா , ரம்யா கிருஷ்ணன் இருவருமே பங்கேற்கவில்லை. இது குறித்து விமர்சித்துள்ள பயில்வான் யாருமே வாராதற்கு எதுக்கு சக்ஸஸ் மீட்? என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார். அதுமட்டும் மல்லாமல் தமன்னாவை வளர்ந்துவிட்டது தமிழ் சினிமா தான் அப்படியிருக்கும் போது மார்க்கெட் பிடித்திருப்பதால் இப்போ இப்படி நடந்துகொள்வது ரொம்ப மோசம் என கூறினார் பயில்வான்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…