“புஷ்பா” பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் தனுஷ்.? தெலுங்கில் கவனம் செலுத்த அந்த நடிகர் தான் காரணமாம்..!
Author: Mari12 January 2022, 6:34 pm
இயக்குனர் சுகுமார், டோலிவுட் சினிமாவில் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், நாக சைதன்யா என முன்னணி நடிகர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் படங்களில் நடிக்கும் ஹீரோக்களுக்கு என்றே தனி மேனரிஸம் இருக்கும். சமீபத்தில், இவரது இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து வரும் நடிகர் தனுஷ், சுகுமார் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரேட் மேன் படத்தில் நடித்து வரும் நிலையில், பாலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்திலுமே தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
அந்த அளவுக்கு தனது நடிப்பின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துள்ளார். இதனிடையே, சிவமான நடிகர் தெலுங்கு பிரமாண்ட இயக்குனருடம் குளோஸ் ஆனதே, தற்போது தெலுங்கு படத்தில், முன்னணி இயக்குனருடன், தனுஷ் இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.
0
0