மீண்டும் காமெடி ட்ராக்கை கையில் எடுத்த நடிகர்..! அதுக்கு நான் சரிபட்டு வர மாட்டேன்..!

Author: Rajesh
22 January 2022, 12:09 pm
Quick Share

தனது தனித்துவமான காமெடியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சூரி.
வெண்ணிலா கபடி குழு, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் மக்கள் மனதில் நின்றார். இப்படி தனது காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது விடுதலை என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அமீர் இயக்கத்தில் மீண்டும் ஹீரோவாக சூரி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு படங்களில் ஹீரோவாக நடிப்பதற்காக 7க்கு மேற்பட்ட படங்களில் காமெடி கதாபாத்திரத்தை தவற விட்டுள்ளாராம். சில இயக்குனர்கள் சூரியை வைத்து படம் எடுக்கலாம் என்று கூறினால் அவர்தான் ஹீரோவாக மாறி விட்டார் என்ற கருத்துக்களையும் கூறி வருகிறார்களாம். இப்படியே போனால் வருமான அவுட் தான் என முடிவெடுத்த சூரி, சில காலம் ஹீரோ கதாபாத்திரம் தள்ளிப் போட்டுவிட்டு காமெடி கதாபாத்திரத்தில் மீண்டும் கவனம் செலுத்த போறாராம் சூரி. இவரின் காமெடி கதாபாத்திரத்தில் தான் எதற்கும் துணிந்தவன், டான் ஆகிய படங்கள் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Views: - 576

0

0