அந்த நோயால் தர்காவுக்கு வெளியில் இறந்து கிடந்த நடிகை – சோகமான இறுதி நாட்கள்..!
Author: Vignesh9 April 2024, 6:46 pm
பிரபல மலையாள நடிகை ஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சாலையோரம் கிடந்து பின்னர் பரிதாபமாக இறந்தது ரசிகர்களின் நினைவுக்கு தற்போது வந்துள்ளது. இந்த செய்தி திடீரென வைரலாகி வருகிறது. அந்த நடிகை வேறுயாரும் இல்லை. ரஜினி கமலின் ஆஸ்தான நாயகி தான்.
மேலும் படிக்க: அதுக்காக நானும் விஷாலும் கெஞ்சி கூட பாத்துட்டோம்.. ஒன்னும் வேலைக்கு ஆகல.. சுந்தர் சி வருத்தம்..!
பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபலமாக இருந்த மலையாள நடிகை நிஷா நூரின் பரிதாபமான மரணம் குறித்து தற்போது மீண்டும் பேச்சு எழுந்துள்ளது.
அதாவது தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நிஷா நடித்து வந்தார். நிஷாவின் வாழ்க்கை பரிதாபமாக ஆனதற்கு தயாரிப்பாளர் ஒருவரே காரணம் என்று சொல்லப்படுகிறது. 80 களில் கமல், ரஜினி உலக நாயகனின் டிக் டிக் நடிக் படத்தில் நடித்தவர் நிஷா நூர். இவர் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார்.
மேலும் படிக்க: அந்த தப்பு பண்ணி இருக்கீங்களா ?.. பேட்டியில் கடுப்பான அனிகா..!
பல ஹிட் படங்களை கொடுத்த நிஷா திடீர் என்று நடிப்பை நிறுத்தி தயாரிப்பாளர் ஒருவர் நிஷாவை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிட்டதால் அவர் நடிக்கவில்லை என்று அப்போது சொல்லப்பட்டது.
நிஷா குறித்தும் இவரின் பாலியல் தொழில் விவகாரம் பற்றி தெரிந்த இயக்குனர்கள் நிஷாiவ தங்கள் படங்களில் நடிக்க வைக்க விரும்பவில்லை. எனவே, தயாரிப்பாளர் ஒருவரால் தடம் மாறிப் போன நிஷா எங்கே போனார் என்றே பல ஆண்டுகள் தெரியாமல் இருந்தது.
பின்னர் பல ஆண்டுகள் கழித்து நாகை அருகே உள்ள தர்கா ஒன்றுக்கு வெளியே பரிதாபமான நிலையில், சாலையோரம் நிஷா எலும்புக்கூடு போன்ற நிலையில் பரிதாபமாக படுத்துக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, நிஷாவின் உடலில் புழுக்கள் மற்றும் எறும்பு ஓடிக் கொண்டிருந்ததை பார்த்த முஸ்லிம் முன்னேற்ற கழக ஆட்கள் அவரை மீட்டு தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிஷா சிகிச்சை பலனின்றி பலியானார்.
0
0