“போடுறா வெடிய ஆரி தான் BIG BOSS -4 டைட்டில் வின்னர்” வெறித்தனமான சம்பவம் !

16 January 2021, 2:43 pm
aari - Updatenews360
Quick Share

இப்போது நாங்கள் சொல்லபோவது ஒன்னும் புதிதல்ல, எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான்.. ஆனால் தற்போது Almost அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்றே சொல்லலாம். Big Boss நிகழ்ச்சி தொடங்கிய சில வாரங்களிலேயே நம்ம ஆரிதான் டைட்டில் வின்னர் என்பது கிட்டத்தட்ட மக்களின் தீர்ப்பானது.

நாட்கள் போக போக அவருக்கு இருக்கும் மாஸ் பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியனால் அதிகரித்தது. எல்லா வாரம் இறுதியிலும் முதல் நபராக அவர் காப்பாற்றப்படுபவர் ஆரி தான். இதனால் போட்டியாளர்கள் இவர் மீது பொறாமை கொண்டு மேலும் இவரை சீண்டி ஹீரோவாக்கினார்கள்.

இந்த நிலையில் இந்த வாரத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடையவுள்ள நிலையில் டைட்டில் வின்னர் யார்? என கேள்வி நிலவ, சற்று முன் வெளியான தகவலின்படி ஆரி, தனக்கு அடுத்த நிலையில் உள்ள போட்டியாளரை விட சுமார் 17 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. போடுறா வெடிய !

Views: - 10

0

0