கைவசம் இத்தனை படமா !!?? தமிழ்சினிமாவை கலக்கப்போகும் காமெடி நடிகர் -ரெடின் கிங்ஸ்லி!

Author: kavin kumar
16 October 2021, 5:08 pm
redin kingsley
Quick Share

ரெடின் கிங்ஸ்லி வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகர் . இவர் தமிழில் சந்தானம் கதாநாயகனாக நடித்த ‘A1’ திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் . மேலும் இவர் ‘கோலமாவு கோகிலா’ முதல் ‘நெற்றிக்கண்’  வரை சில படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார் .இவர் சமீபத்தில் காமெடியானாக நடித்து வெளியான படம் ‘ டாக்டர் ‘ இந்த படத்தில் இவர் ‘ FOP ‘ ( friends of Police )கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . 

ரெடின் கிங்ஸ்லியின்  அசத்தலான காமெடி நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஹீரோ சிவகார்த்திகேயனுடன் பயணிக்கும் ரெடின் கிங்ஸ்லி செய்யும் காமெடிக்கு பஞ்சமே இல்லை. இதில் யோகிபாபு வந்த பின்  இவர்கள் இருவரும் செய்யும் காமெடி சேட்டை அளவில்லாதது. என்ன தான் ரெடின் கிங்ஸ்லி நல்ல காமெடியனாக இருந்தாலும் அவருக்கு இன்னும் சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கின்றன முழுநேர காமெடி  கதாபாத்திரம் அமையவில்லை .  

டாக்டர் படத்தை தொடர்ந்து கைவசம் நிறைய படங்களில் கமிட் ஆகியுள்ள நம்ம ரெடின் கிங்ஸ்லி தற்போது ரஜினியுடன் இருப்பதுபோல் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளதாக  தகவல்கள் கிடைத்துள்ளது .இதனை தொடர்ந்து நெல்சன் –தளபதி விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘பீஸ்ட்’, மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘இடியட்’, சிம்பு நடிப்பில் உருவாகிவரும் ‘பத்து தலை’ ஆகிய படங்களில் ரெடின் கிங்ஸ்லி காமெடி நடிகனாக நடித்துள்ளார். இவர் நடித்துள்ள படங்கள் அனைத்தும் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளியாக உள்ளன. இதன்மூலம் நடிகர் ரெடின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வளம் வருவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 467

4

0