கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் பிரபல ” யூடியூபர்கள் ” யார்னு தெரிஞ்ச ஷாக் ஆய்டுவீங்க !!

Author: kavin kumar
16 October 2021, 4:29 pm
vikram_movie_kamalHaasan
Quick Share

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  ‘மாநகரம்’ படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். முதல் படமான மாநகரம்  லோகேஷுக்கு நல்ல வெற்றியை கொடுத்தது .இதனால் தமிழ் சினிமாவில் உள்ள பெரிய நடிகர்கள் இவர் பக்கம் கதை கேட்க தொடங்கினர். 

 லோகேஷ் கனகராஜ் இயக்கி நடிகர் கார்த்தி நடித்து 2019 ஆண்டு வெளியான படம்  ‘கைதி’  இந்த படம் தமிழ் சினிமாவில் பெரிய ஹிட் கொடுத்தது . லோகேஷ் கனகராஜ் இயக்கிய இரண்டு படங்களும் ஹிட் அடிக்க நடிகர் விஜயுடன்  கைகோர்த்தார் லோகேஷ் கனகராஜ் .தளபதி விஜய் ஹீரோவாக , மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக , ராக்ஸ்டார் அனிருத் இசையில் வெளியான படம் ‘மாஸ்டர்’  . படத்தின் பாடல்கள் செம ஹிட் ஆகா, படமோ ஒரு கமர்சியல் ஹிட் கொடுத்தது. இதனால்  லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி டிரேக்டர்களில் ஒருவரானார். 

 உலகநாயகன் கமல்ஹாசன் பார்வையில் பட்ட லோகேஷ் கனகராஜ்  தற்போது அவரை வைத்து  ‘ விக்ரம்’ என்ற படத்தை   இயக்கி வருகிறார் இந்த படத்தில் விஜய்சேதுபதி  மற்றும் பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் . பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது மீதம் உள்ள காட்சிகளை படமாக்க தொடங்கியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கிய நிலையில்  ‘ விக்ரம் ‘ படத்தின் பிரபல யூடியூபர்கள் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது . அந்த பிரபல யூடியூபர்கள்  வேற யாரும் இல்லதமிழில் யூடியூபர்களில்  முதலில் 10 மில்லியன் சந்தாதாரர்கள் கொண்ட  ‘இன்னைக்கு ஒரு புடி’  ” Village Cooking Channel ”   அவர்கள் தான். ‘விக்ரம்’ படத்தில் அவர்களது பகுதி ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது இருப்பினும் இவர்களுக்கு படத்தில்  என்ன கதாபாத்திரம் என்பது தெரியவில்லை .இவர்கள் பொதுவாக உணவு சமைத்து அதனை யூடியூபில் வெளியிடுவார்கள். படத்திலும் உணவு சம்மந்தப்பட்ட காட்சிகளில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது .இதே போல் வேறு யூடியூபர்கள்  யாரேனும்  ‘விக்ரம்’ படத்தில்  நடித்துள்ளார்களா என்பதை அடுத்த அப்டேட் வரும் வரை வெயிட் பண்ணி தான் தெரிஞ்சுக்கணும். .

Views: - 370

1

1