படம் ஓடாதுனு தெரிஞ்சும் எடுத்தேன்… இயக்குனர் சுசீந்திரன் வைரல் பேட்டி.!

Author: Selvan
16 February 2025, 3:11 pm

ராஜபாட்டை படம் குறித்து மனம் திறந்த சுசீந்திரன்

இயக்குனர் சுசீந்திரன் விக்ரமை வைத்து எடுத்த ராஜபாட்டை திரைப்படம் தோல்வி படம் என தெரிஞ்சே எடுத்தேன் என கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: விடாமல் துரத்தும் ‘விடாமுயற்சி’…10 நாளில் செய்துள்ள சாதனை எவ்வளவு.!

வெண்ணிலா கபடி குழு மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் சுசீந்திரன்,இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னாடி பல வேலைகளை செய்து சிரமப்பட்டுள்ளார்,ஆரம்பத்தில் கல்யாண விசேஷங்களில் சப்ளையர் வேலை பார்க்க போவேன் அதில் கிடைக்கின்ற காசை வைத்து தான் சென்னையில் ரூம் வாடகை கொடுத்து சினிமா வாய்ப்பு தேடி அலைவேன் என சமீபத்திய பேட்டியில் கூறியிருப்பார்.

Suseenthiran Talks About Rajapattai Movie Failure

மேலும் அவர் விக்ரமை வைத்து எடுத்த ராஜபாட்டை திரைப்படம் ஆரம்பித்த 10 நாளில் இந்த படம் தோல்வி படமாக அமையும் என தெரிந்து விட்டது என கூறினார்.இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல திரைப்படத்தை இயக்கினார்,தொடர்ந்து புது முகங்களை வைத்து சிறு பட்ஜெட்டில் வெற்றி படங்களை கொடுத்து வந்த இவருக்கு,அடுத்தடுத்து பல படங்கள் தோல்வியை சந்தித்தன,அதிலும் குறிப்பாக விக்ரமை வைத்து இயக்கிய ராஜ பாட்டை படம் தோல்வி படம் என தெரிந்தும் இயக்கியுள்ளார்.

அந்த பேட்டியில் அவர் கூறியது,எனக்கு ராஜபாட்டை தோல்வி படம் என தெரிந்த பிறகு தயாரிப்பாளரிடம் சென்று இப்படத்தை நிறுத்திருலாம் என கூறினேன்,அவர் உடனே பயந்து ஏற்கனனவே செல்வராகவனை வைத்து 35 நாள் ஷூட்டிங் பண்ணி ஏகப்பட்ட நஷ்டம் ஆயிடுச்சு,அதனால நீங்கள் எப்படியாவது படத்தை எடுங்க என்று கூறினார்,ஒரு படம் ஓடாது என தெரிஞ்சும் அந்த படத்தை எடுக்கும் மனநிலை மிகவும் கடினமானது என அந்த பேட்டியில் இயக்குனர் சுசீந்திரன் கூறியிருப்பார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!