கெத்தாக களமிறங்கிய சிம்பு… செலிபிரேஷன் ஆரம்பிக்கலாமா.? வைரலாகும் BiggBoss Ultimate Promo…

Author: Rajesh
27 February 2022, 10:57 am
Quick Share

கடந்த ஐந்து வருடமாக பிக் பாஸ் ஷோவை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். அந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து, தற்போது ழுவுவுயில் 24 நேரமும் ஒளிபரப்பும் வகையில் பிக் பாஸ் அல்டிமேட் என்ற ஷோ தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் முன்னால் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போட்டியாளர்கள் தான் பங்கேற்றுள்ளனர். அதே பார்;த்து பார்த்து சலித்துப் போன முகங்கள் அதே நடிப்பில், அதே அழுகை இதனால் பார்வையாளர்களை சற்று சலிப்படையச் செய்துள்ளதாகவே பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, தீடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது தான், விலகுவதாக கமல் ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு யார் அடுத்து தொகுப்பாளர் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதன்பின், கமல் ஹாசனுக்கு பதில் நடிகர் சிம்பு தான் இனி பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்று அறிவித்திருந்தனர். அதற்கான புரோமா நிகழ்ச்சியில் செம கெத்தாக வலம் வந்தார் சிம்பு. இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை இன்று மாலை 6: 30 மணிக்கு சிம்பு தொகுத்து வழங்க இருப்பதால், அதற்கான பிரத்யேகமான புரோமோ ஒன்று வெளிவந்துள்ளது.

அதில் கோர்ட் சூட் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக வந்திறங்கிய சிம்பு. வந்தாச்சு..! செலிபிரேஷன் ஆரம்பிக்கலாமா..? என்று புன்னகையுடன் பேசுகிறார். இந்த புரோமோ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 536

3

0