தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பால் திரையரங்கின் டிக்கெட் விலை குறையுமா? இது செம மேட்டரா இருக்கே!

Author: Prasad
31 May 2025, 11:24 am

அதிக டிக்கெட் கட்டணம்

தமிழகத்தை பொறுத்தவரை சமீப காலமாக டிக்கெட் கட்டணம் மிக அதிகமாகவே நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் டாப் ஹீரோக்கள் நடித்த திரைப்படங்களின் முதல் நாள் முதல் காட்சியின் டிக்கெட் கட்டணம் ரூ.1000க்கும் குறையாமல் விற்கப்படுகிறது. 

சாதாரண நாட்களில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ.200க்கும் மேல் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இது போக பார்க்கிங், உணவுப்பண்டங்கள் என ஒரு குடும்பம் திரையரங்கிற்கு படம் பார்க்கச் சென்றால் ரூ.2000  செலவாகிறது. இதனால் பலரும் ஓடிடியில் படத்தை பார்த்துக்கொள்ளலாம் என திரையரங்கத்திற்கே செல்லாமல் இருந்துவிடுகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு கேளிக்கை வரி குறித்த ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

டிக்கெட் கட்டணம் குறையுமா?

அதாவது தமிழ்நாடு பிலிம் சேம்பரின் வேண்டுகோளின்படி  தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரி 8%-ல் இருந்து 4% ஆக குறைக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. கேளிக்கை வரி குறைக்கப்படுவதால் திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!