இன்னொரு அசுரன் Ready…! வைரலாகும் கர்ணன் படத்தின் Teaser !

31 January 2021, 12:44 pm
Quick Share

தனுஷின் அடுத்த படத்தை ’பரியேறும்பெருமாள்’ மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார் . தற்போது அந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஏப்ரல் மாதம் Release செய்ய இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்தால், நாங்க ஏப்ரல் மாதம் வரபோகிறோம் என்று சொல்வது போல் இல்லை. தயவு செய்து யாரும் அந்த மாதத்தில் வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது போல தெரிகிறது. ஏற்கனவே தனுஷ் நடித்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜகமே தந்திரம் படம் வரும் மார்ச் மாதத்தில் நெட்பிளிக்ஸ் வலைதளத்தில் Release ஆகபோகிறது என்று கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது என்பது கூடுதலான சோகமான தகவல்.

சரி கர்ணன் படத்துக்கு வருவோம்…முதல் படத்தில் அழுத்தமான சமூக கருத்து ஒன்றை தெரிவித்த இயக்குனர் மாரி செல்வராஜ், இந்த படத்தில் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சனையை கையில் எடுக்கப் போவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் பிரச்சனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது தெரிந்தது. அந்த கதையை மாரி செல்வராஜ் எடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம் இந்த படமும் ஒரு குறிப்பிட்ட சாதியை மையப்படுத்தி தான் இருக்கும் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Views: - 1

0

0