சந்தோஷ் நாராயணனா? உதித் நாராயணனா?- ரசிகரின் செயலால் தலையில் அடித்துக்கொண்ட இசையமைப்பாளர்!

Author: Prasad
14 May 2025, 1:11 pm

டிரெண்டிங் இசையமைப்பாளர்

தமிழ் சினிமாவின் தனித்துவமான இசையமைப்பாளராக வலம் வருபவர் சந்தோஷ் நாராயணன். இவரது பாடல்கள் வெளிவரும்போதெல்லாம் அவை டிரெண்டிங்காக ஆவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தில் இவரது இசையில் இடம்பெற்ற “கனிமா” பாடல் டிரெண்டிங் பாடலாக அமைந்தது. அப்பாடலை பலரும் ரீல்ஸ் செய்து வைரல் ஆக்கினார்கள். இந்த நிலையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பலரையும் நகைச்சுவையில் ஆழ்த்தியுள்ளது. 

teenager came to santhosh narayanan and called him udit narayanan

சந்தோஷ் நாராயணனா? உதித் நாராயணனா?

“நேற்று கொலும்புவின் தெருக்களில் சாதாரணம் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது ஒரு பதின்வயதைச் சேர்ந்த ஒருவர் திடீரென ஓடி வந்து ‘உதித் நாராயணன் சார், உங்கள் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்றார். என்னை பாடகராக அங்கீகரித்ததற்காக இப்போது சந்தோஷப்படுகிறேன்” என நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டுள்ளார். சந்தோஷ் நாராயணன் இந்த டிவிட் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

  • Ravi's with Kenisha.... Actress Khushbu's post creates a stir! கெனிஷாவுடன் ரவிக்கு கல்யாணம்? நடிகை குஷ்பு போட்ட பதிவால் பரபரப்பு!
  • Leave a Reply