“வேலையில்லாத IDIOT” என பிரபல நடிகரை திட்டிய வனிதா..!

Author: Udayaraman
5 August 2021, 5:49 pm
Quick Share

பிரபல நடிகரை வனிதா வேலை இல்லாத இடியட் என சமூக வலைதள பதிவில் திட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவுக்கும் நடுவரான ரம்யா கிருஷ்ணனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக வனிதா அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் இன்னொரு நடுவரான நகுல் இந்த பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார். அதில் வனிதா மீதுதான் தவறு என்றும் ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, நான் வாழ்க்கையில் ரொம்ப பிசியாக இருக்கிறேன். வேலை இல்லாத இடியட்களை கண்டுகொள்ள எனக்கு நேரமில்லை. செட்டில் என்ன நடந்தது என்பதற்கும் அதை ரீடேக் எடுத்து எடிட் செய்து ஒளிபரப்புவதற்கு வித்தியாசம் இருக்கிறது. எனக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களை என்னால் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் நான் வெளியேறினேன்.

எனக்கு ஒருவருடன் பிரச்சனை இருக்கிறது என்றால் இன்னும் பிரச்சனை இருக்கிறது என்றுதான் அர்த்தம். நாங்கள் இருவரும் அதைப்பற்றி பேசாமல் மூடிக் கொண்டு இருக்கும்போது மற்றவர்கள் தலையிட்டு கருத்து சொல்லாமல் இருப்பது நல்லது என்று கூறியுள்ளார். வனிதாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 329

7

5