கமல் பத்தி பேசாதீங்க; நிறைய கண்டென்ட் வெளிய விட்ருவேன்; பிரபல நடிகரின் முன்னாள் மனைவி

Author: Sudha
22 July 2024, 4:40 pm

தாடி பாலாஜி திரைப்படங்களில் துணை நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றார் மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவர் 1997-ம் ஆண்டு பிரகாஷ்ராஜ் மற்றும் சுஹாசினி நடித்த நந்தினி திரைப்படத்தின் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர்.காமெடி நடிகர் விவேக் உடன் இவர் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் மிகப் பிரபலம்.இவருடைய மனைவி நித்யா.சின்னத்திரையில் பிரபலமான தம்பதிகளாக தாடி பாலாஜி நித்யா இருந்தனர்.

இவர்கள் பிக் பாஸ் சீசனிலும் பங்கேற்று பிரபலமடைந்தனர்.இவர்களைப் பற்றிய சர்ச்சைக்கும் எப்போதும் குறைவிருக்காது.

அந்த வகையில் ஒரு தனியார் சேனலின் நெறியாளரிடம் போனில் பேசும் நித்யா நடிகர் கமல் ஹாசன் குறித்து பேசிய ஆடியோ தற்போது பிரபலமாகி வருகிறது.

அந்த நெறியாளர் உங்கள் இருவரின் பிரச்சினையில் கமல்ஹாசன் உதவினார் எனச் சொன்ன போது அவரை பத்தி பேசாதீங்க அப்புறம் நிறைய கண்டென்ட் வெளிய விட வேண்டி இருக்கும். அவர் போல வொர்ஸ்ட் கேரக்டர் பார்த்தது இல்லை என பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

  • bayilvan ranganathan review retro movie முன்னாடியே இது நடந்திருக்கு, ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்? ரெட்ரோ படத்தை பிரித்து மேய்ந்த பயில்வான்!