“தல 61 இந்தியாவிலேயே Best படமா இருக்கும்” பிரபல இசையமைப்பாளர் சொன்ன அதிரடி தகவல் !

20 September 2020, 6:42 pm
Quick Share

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பணிபுரிந்தவர்களே வலிமை படத்திலும் சிலர் இருக்கிறார்கள். படத்தின் இசை யுவன் ஷங்கர் ராஜா தான். கடந்த சில மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு Corona Virus காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் அஜித், பாவல், ராஜ் ஐயப்பா, ஹுமா என பல மாநிலங்களில் இருந்து நடிக்கின்றனர். அவ்வளவுதான் இப்போ வரைக்கும் தெரியும். அஜித் போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ள இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித் நடிப்பார் என்கிற தகவல் நாளுக்கு நாள் வலிமை அடைந்து கொண்டே போகிற இந்நிலையில் சூரரைப்போற்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், ” சுதா கொங்கரா அஜித்துக்கு சொன்ன கதை பயங்கரமாக இருக்கும், அது நடந்துச்சுன்னா வேற லெவல்ல ஒரு படம் நமக்கு கிடைக்கும். அந்த படம் இந்தியாவிலேயே பெஸ்ட் ஆக்சன் படமா இருக்கும்” என்று நம்ம காதை கடிக்கிறார்.

Views: - 19

0

0