வாகா எல்லையில் வலிமையான ENTRY : தேசியக் கொடியை ஏந்தி ராணுவ வீரர்களுடன் அன்பை பொழிந்த தல!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2021, 10:01 pm
Ajith Wagah -Updatenews360
Quick Share

தல அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை அதிகம் விரும்பாதவர்.

ரசிகர்களுக்காக மறைமுகமாக ஏராளமான உதவி செய்யும் தல, பைக் ரைடிங் அதிகம் ஆர்வம் கொண்டவர். H. வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. ஷூட்டிங் முடித்து விட்ட களைப்பில் வீட்டில் படுத்து தூங்காமல் குஷியாக பைக்கை எடுத்து ஊர்சுற்ற கிளம்பி விட்டார் நம்ம தல. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். போலீஸ் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், வெளியான வலிமை படத்தின் பாட்டு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அவ்வப்போது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொள்ளும் அஜித் தற்போது வாகா எல்லையில் ராணுவ வீரர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.

வாகா எல்லையில் தல என்ட்ரி கொடுத்த வீடியோவும், ராணுவ வீரர்களுடன் எல்லையில்லா அன்பை பொழிந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 251

2

0