வெளியான தல அஜித்தின் லேட்டஸ்ட் லுக் – இணையத்தில் தீயாய் வைரலாகும் புகைப்படம்

25 January 2021, 10:21 pm
Quick Share

வலிமை படத்தின் அப்டேட் வருமா வராதா, எப்ப வரும் என வழிமேல் விழி வைத்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள். அண்ணாத்த படம் அப்டேட் கூட வந்துவிட்டது, ஆனால் நம்ம தல நடிச்ச படத்தை பத்தி எந்த ஒரு தகவல் வெளியாக மாட்டேங்குதே என புலம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இன்று வெளியாகியிருக்கும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக் வரப்பிரசாதமாக அமைந்தது.

வலிமை படத்திற்கு இணையாக தொடங்கப்பட்ட மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளிவந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்புல் காட்சிகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் வலிமை படத்தில் தல அஜித், யுவன் சங்கர் ராஜா, போனிகபூர் இந்த மூன்று அப்டேட்களை தவிர வேறு எந்தப் அப்டேட்டும் வந்தபாடில்லை. ஆனாலும் பொறுமை காத்த ரசிகர்கள் இன்று வெளியான அஜித்தின் புகைப்படத்தை பார்த்து புல்லரித்துப் போய் கிடக்கிறார்கள்.

ரேஸர் காஸ்ட்யூமில் போஸ் கொடுத்திருக்கும் தல அஜித் குமார் படத்தை வெளியிட்டது யார் என தெரியவில்லை, ஆனால் அந்த மகராசன் நல்லா இருக்கணும் என தல ரசிகர் அனைவரும் வாழ்த்தி வருகின்றனர். தல அஜித்தின் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 6

0

0