துப்பாக்கி சுடுதல் போட்டியில் முதல் ஆளாக தேர்வான தல – குஷியில் ரசிகர்கள்

5 March 2021, 8:13 pm
Quick Share

மெக்கானிக் ஆக இருந்து விளம்பர படங்களில் நடித்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, தற்போது தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நாயகனாக உருமாறி இருக்கிறார் தல அஜித்குமார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட அவமானங்களையும், தோல்விகளையும் சந்தித்து தனது கடின உழைப்பால் மேலே வந்தார்.

கார் ரேஸர் ஆக இருந்தபோது ஏற்பட்ட விபத்தில், அவர் உடம்பில் அதிகமான காயங்கள் ஏற்பட்டு நிறைய ஆபரேஷன்கள் செய்யப்பட்டன அதில் முதுகில் செய்யப்பட்ட ஆபரேஷனால் மிகவும் பாதிக்கப்பட்டார். பின் மீண்டு வந்தவர், நடிப்பு மட்டுமில்லாமல் கார் ரேஸர், பைக் ரேசர், ட்ரோன் பற்றி மாணவர்களுக்கு சொல்லித் தரும் ஆசிரியர் என பலதுறைகளில் வெற்றி பெற்று வருகிறார். சமீப காலமாக துப்பாக்கி சுடுதலில் அதிக ஈடுபாடுடன் இருந்து போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

தற்போது நடந்து கொண்டிருக்கும் 40வது தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் பில் கலந்து கொண்டார் அஜித்குமார். கடந்த மூன்று நாட்களாக அதைப் பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த போட்டியில் 10m பிஸ்டல் பிரிவில் பங்குகொண்டு வெற்றி பெற்று அடுத்த ரவுண்டுக்கு முன்னேறி இருக்கிறார். இதனால் அவரை விட அவரது ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள்.

Views: - 1

1

0