ஜெயலலிதா கெட்டப்பில் அச்சு அசலாக இருக்கும் கங்கனா ரனாவத் – வெளியான தலைவி படத்தின் special புகைப்படங்கள்

14 February 2021, 4:16 pm
Quick Share

தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் கங்கனா ரணாவத். டீசண்டான நடிப்பை வெளிப்படுத்தி ஓரளவு கவனிக்க வைத்தார். இவர் ஹிந்தியில் குயின், தானு வெட்ஸ் மானு உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் அதிகம் நடித்து வருகிறார்.

அதன் தாக்கத்திலோ என்னவோ அடிக்கடி சர்ச்சைக்குரிய செய்திகளில் சிக்குகிறார். ட்விட்டரில் கன்னாபின்னாவென பேசிவரும் கங்கனா ரனாவத்திற்கு ஆதரவு குரல்களை விட எதிர்ப்பு குரல்கள் அதிகம் கிளம்பி வருகிறது.

தமிழில் அவ்வளவாக படம் நடிக்காத கங்கனா, ஏ எல் விஜய் இயக்கும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தில் நடித்து வருகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத், எம் ஜி ஆராக அரவிந்த் சுவாமி, பூர்ணா, மதுபாலா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஜெயலலிதாவாக இவர் நடித்து வரும் தலைவி படத்தில் இருந்து சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் ஜெயலலிதா போலவே தோற்றமளிக்கிறார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 12

0

0