கல்யாணம் பண்ணவங்க Must Watch! ஃபேமிலி ஆடியன்ஸ் ரெக்கமண்ட் செய்யும் தலைவன் தலைவி?

Author: Prasad
25 July 2025, 1:47 pm

குடும்பங்கள் கொண்டாடும் தலைவன் தலைவி 

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் ஜோடியாக நடித்த திரைப்படம் “தலைவன் தலைவி”. இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளனர். 

இத்திரைப்படம் முழுக்க முழுக்க கணவன் மனைவிக்கு இடையேயான பிரச்சனைகளை மையப்படுத்தி நகைச்சுவை பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளிவந்தபோதே ரசிகர்களின் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படம் குறித்த ரசிகர்களின் டிவிட்டர் விமர்சனங்களை இப்போது பார்க்கலாம்.

Thalaivan thalaivii movie getting positive reviews in twitter

Complete Entertainer…

“தலைவன் தலைவி திரைப்படம் Complete Entertainer” என்று ஒருவர் ஒரே வரியில் பாராட்டியுள்ளார்

Thalaivan thalaivii movie getting positive reviews in twitter

“படத்தில் நித்யா மேனன் விஜய் சேதுபதியின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. காமெடி நன்றாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது” என ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். 

“படம் சிறப்பாக இருக்கிறது. காமெடி காட்சிகள் நன்றாக இருக்கிறது. நடிகர்கள், ஸ்கிரீன்பிளே என அனைத்துமே அருமை” என ஒருவர் தெரிவித்துள்ளார். 

“இத்திரைப்படம் ஒரு பக்கா ஃபேமிலி என்டெர்டெயினர். விஜய் சேதுபதிக்கும் நித்யா மேனனுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி அபாரம்” என ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல பாஸிட்டிவ் விமர்சனங்களே இத்திரைப்படத்திற்கு வெளிவருகின்றன. அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த பலரும் பத்திரிக்கையாளர்களிடம் தங்களது கருத்துக்களை கூறும்போது “குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் இது. குறிப்பாக திருமணம் ஆனவர்கள் பார்க்க வேண்டிய படம்” எனவும் பாராட்டி வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!