ஒரு Rugged Love Storyக்கு தயாரா? வெளியானது தலைவன் தலைவி படத்தின் அட்டகாசமான டிரெயிலர்
Author: Prasad17 July 2025, 5:18 pm
பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி-நித்யா மேனன் ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தலைவன் தலைவி”. இத்திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தில் ஆகாச வீரன் என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அரசி என்ற கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் உறவு சிக்கல்களும் மற்றும் சண்டைகளை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது.
இதில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோருடன் யோகி பாபு, தீபா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு அசத்தலான ஃபேமிலி டிராமா திரைப்படமாக உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. இத்திரைப்படம் வருகிற ஜூலை 25 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் டிரெயிலர் இதோ…
