குறி வச்சா இரை விழனும்..: பிரம்மாண்டமாக வெளியான தலைவர் 170 டைட்டில் டீசர் ரெடி..!

Author: Vignesh
12 December 2023, 6:00 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் கூட இப்படத்தின் போஸ்டர் வெளியாகி ட்ரோல் செய்யப்பட்டது.

லால்சலாம் படத்தை முடித்த பின்னர் ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

rajini - updatenews360

இந்நிலையில், அமிதாப் பச்சன், பகத் பாசில், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக தலைவர் 170 படத்தில் பணிபுரியும் நட்சத்திரங்களின் அறிவிப்பு ஒன்றின்பின் ஒன்றாக வெளியானது.

rajini - updatenews360

சமீபத்தில், இப்படத்திலிருந்து ரஜினியின் First லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், இதுவரை பார்த்திராத மிரட்டலான லுக்கில் இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில், ரஜினிகாந்தின் பிறந்த நாள் முன்னிட்டு படத்தின் டைட்டிலுடன் ஸ்பெஷல் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?